மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாரடைப்பால் துடித்தவரை காப்பாற்ற நீதிபதியின் காரை உபயோகித்த 20 இளைஞர்கள்: திருட்டு வழக்கில் தேடும் காவல்துறை.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் ரயில் நிலையத்தில், நீதிபதிக்காக அவரது கார் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் காத்திருந்துள்ளனர். அந்த சமயம் அங்கு வந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழு, இவர்கள் இருவரையும் மறித்து, நீதிபதியின் காரில் ஒருவரை ஏற்றுக்கொண்டு அவசரமாக புறப்பட்டு சென்றது.
இதனால் பதறிய ஓட்டுநர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற போலீசார் விசாரிக்கையில், கடந்த 10-ம் தேதி டெல்லியில் இருந்து ஜான்சி நோக்கி தட்சின் வழியே பயணம் செய்த ரயில் பயணியான ரஞ்சித் சிங் யாதவ் என்ற 59 வயதுடைய கல்லூரி பேராசிரியர் மாரடைப்பு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
அப்போது விளையாட்டுப் போட்டிக்காக சென்ற 20-பேர் கொண்ட மாணவர்கள் குழுவும் அந்த ரயிலில் பயணம் செய்துள்ளது. பேராசிரியருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்து அவருக்கு உதவ முற்பட்ட இளைஞர்கள் குழு, குவாலியர் ரயில் நிலையம் வந்ததும் அவரை அவசர அவசரமாக தூக்கிக்கொண்டு விரைந்து அங்கிருந்த நீதிபதியின் காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தது.
ஆனால் அது அம்மாநில உச்சநீதிமன்ற நீதிபதி கார் என்பது அவர்களுக்கு முன்னதாக தெரியவில்லை. இளைஞர்கள் சார்பில் அவசர ஊர்தி சரியான நேரத்திற்கு வரவில்லை என்பதால் அந்த காரை எடுத்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது. நீதிபதியின் கார் அங்குள்ள ஜெய் ஆரோக்யா மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் யார்? என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.