அதிர்ச்சி சம்பவம்.! 23 டன் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்.! வட மாநில இளைஞர்கள் கைது.!
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் 21,000 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வடமாநில நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் போதை சாக்லேட்டுகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள 2 குடோன்களில் போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையில் 21,000 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சீதாராம் சிங் மற்றும் சிபுகுமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து கொரியர் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை ஐதராபாத்திற்கு கடத்தி வந்தது தெரிய வந்திருக்கிறது. மேலும் இவர்களுடன் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் 21 ஆயிரம் கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.