வெள்ளத்தை தொடர்ந்து கேரளாவில் தொடரும் துயரம், உச்சகட்ட பீதியில் மக்கள்.!



23 people dead in kerala for rat fever

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 450க்கும் மேற்பட்டோர் பலியானர.மேலும்  7 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இதனை அடுத்து மத்திய அரசு, கேரளாவில் ஏற்பட்ட இந்த பேரழிவை, தீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது.மேலும் பல்வேறு தரப்பினரும் நிவாரணநிதி அளித்து உதவி வருகின்றனர். 

இந்நிலையில் அங்கு தற்போது மழை நின்று மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். 

KERALA

இந்த நிலையில், மழை பாதிப்பு பகுதிகளில் தொற்றுநோய்கள் ஏற்பட்டு சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எலிக்காய்ச்சல் அதிகம் பரவி உள்ளது.

 மேலும் இந்த எலிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு 
 நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் தற்போது வரை  பலியின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறி உள்ளார்.
.