மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காவல்நிலையத்தில் மது அருந்திய காவலர்கள்..! வைரல் வீடியோவால் மூவரும் சிக்கிய பின்னணி..!!
காவல் அதிகாரிகள் காவல் நிலையத்தில் வைத்தே மதுபானம் அருந்தக்கூடிய பரபரப்பு வீடியோ வைரலாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம், கவுனிப்பள்ளி காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் சலபதி, அஞ்சி மற்றும் மஞ்சுநாத் மூவரும் சமீபத்தில் காவல்நிலையத்திற்குள் வைத்து மதுபானத்தை அருந்தியுள்ளனர். இது குறித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அதனைக்கண்ட சமூக ஆர்வலர்கள் காவலர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் தலைமையிலான விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.