மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுரோட்டில் குழந்தையை ஈன்றெடுத்து மயங்கிய இளம்பெண்; உயிரைக்காக்க ஓடோடிய காவல்துறை, அவசர ஊர்தி பணியாளர்கள்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, குர்லா, காமணி ஜங்க்ஷன் பகுதியில் 30 வயதுடைய பெண்மணி, குழந்தையை பிரசவித்து உயிருக்கு போராடுவதாக காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்தி பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மயக்க நிலையில் இருந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவரின் பிறந்த குழந்தைக்கும் சிகிச்சை அளித்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி பெண்மணி சுவர்ணா மிர்கால் (வயது 30) என்பது தெரியவந்துள்ளது.
அவருக்கு இயற்கையாக சாலையில் பிரசவம் ஏற்பட்டதா? அல்லது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இன்றி பயணிக்கும்போது பிரசவம் ஏற்பட்டதா? என அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.