மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காங்கிரீட் இடிந்ததால் கிணற்றில் விழுந்த 35 பக்தர்கள் பரிதாப பலி..!! ராம நவமியில் சோகம்..!!
ராம நவமி கொண்டாடங்களின் போது கிணறு இடிந்து விழுந்த விபத்தில் 35 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியில் புகழ்பெற்ற பெலேஷ்வர் மகாதேவ் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ராம நவமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராம நவமி வழிபாட்டின் போது கோவிலில் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.
பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் இருந்த கிணறு காங்கிரீட் ஸ்லாப்கள் கொண்டு மூடப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால், பக்தர்கள் அதன் மேலும் ஏறி ராம நவமி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், காங்கிரீட் ஸ்லாப் உடைந்ததால், அதன் மீது நின்று கொண்டிருந்த பக்தர்கள் கிணற்றில் விழுந்தனர்.
எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில், மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணவில்லை, 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 2 பேர் சிகிச்சைக்கு பெற்று பத்திரமாக வீடு திரும்பியுள்ளனர். மேலும் ஒருவரை காணவில்லை என்றும் அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இந்தூர் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
கிணற்றின் மீது இருந்த காங்கிரீட் ஸ்லாப் உடைந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கியவர்களில் 19 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். ராம நவமியை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டின் போது விபத்து நேரிட்டது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.