மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனநலம் பாதிக்கப்பட்டவரால் நடந்த பயங்கரம்; அக்கம் பக்கத்து வீட்டை சேர்ந்த 4 பேர் குத்திக்கொலை.!
தனது குடும்பம் தன்னிடம் இருந்து பிரிவதற்கு அக்கம் பக்கத்தினர் காரணம் என நினைத்த இளைஞர், மனநலம் பாதிக்கப்பட்டு 4 பேரை கொலை செய்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பார்வதி மேன்ஷன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சேத்தன் காலா (வயது 54). இவருக்கும் - குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் சேத்தன் காலாவின் மனைவி மற்றும் பிள்ளைகள் அவரைப் பிரிந்து சென்றுள்ளனர்.
இதற்கு தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபர்களே காரணம் என நினைத்த சேத்தன் காலா, அவர்களின் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். அவ்வப்போது, பித்துப்பிடித்தார் போல செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 3:30 மணி அளவில் பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த காலா, அவர்களின் வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து அங்கிருந்தோரை சரமாரியாக குத்தியுள்ளார்.
இவரின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் அலறியபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். காலாவும் தனது வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், தாக்குதலில் காயம் அடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அடுத்தடுத்து அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். காலா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.