மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மூளைச்சாவு அடைந்த 6 வயது சிறுமியால் மறுவாழ்வு பெற்ற 5 பேர்..நொய்டாவில் நெகிழ்ச்சி..!
மர்ம நபர்களால் சுடப்பட்டு மூளைச்சாவு அடைந்த 6 வயது சிறுமியால் 5 பேர் மறுவாழ்வு பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த நாராயணன் பூனம் தேவியின் மகள் ரோலி. ரோலியை கடந்த மாதம் 27 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், தலையில் குண்டு பாய்ந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் மூளையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றார். ரோலியை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சி செய்து வந்த நிலையில், ரோலி சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.
அதன் பின்னர் ரோலின் பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்து மருத்துவர்கள் விளக்கிக் கூறியதனால், உடல் உறுப்பு தானம் செய்ய பெற்றோர்கள் ஒப்புக் கொண்டார்கள். இதனை தொடர்ந்து கல்லீரல், சிறுநீரகங்கள், இரு கருவிழிகள், இதய ரத்தக்குழாய்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு, ஐந்து பேருக்கு பொருத்தப்பட்டது.
இதன் மூலம் இறந்த பின்னரும் 5 பேருக்கு ரோலி மறுவாழ்வு அளித்துள்ளார். இதன் மூலம் இறந்த பின்னரும் ரோலி இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.