மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாம் அவளால் தான்.. 11 மாத தங்கையை கொலை செய்த 5 வயது குழந்தை.! காரணம் என்ன?
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷானம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா. இவருக்கு 5 வயதில் நிர்மலா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
இரண்டாவது குழந்தை பிறந்தது முதல், முதல் குழந்தையின் மீதுள்ள கவனம் படிபடியாக குறையவே விரக்தியடைந்த நிர்மலா தனது தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு கொலை செய்துள்ளார். அதாவது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காவியா தனது இரண்டாவது குழந்தையை படுக்க வைத்து விட்டு வேலை பார்த்துள்ளார்.
அப்போது முதல் குழந்தை நிர்மலா தனது தங்கையை தூக்கி சென்று மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் போட்டுள்ளது. அதனையடுத்து குழந்தையை காணாததால் குடும்பத்தினர் தேடி பார்த்துள்ளனர். அதனையடுத்து குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரனையில் ஈடுப்பட்ட போது 5 வயது குழந்தையிடமும் விசாரித்துள்ளனர். அப்போது தான் உண்மை தெரியவந்துள்ளது.
அக்குழந்தை போலீசாரிடம்,தங்கை பிறந்தது முதலே அவள் மீது தான் எனது பெற்றோர்கள் அதிக பாசத்துடன் இருந்தனர்.என் மீது பாசம் இல்லை. எனவே என் தங்கையை தண்ணீர் தொட்டியில் போட்டதாக கூறியுள்ளது. இதனை கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி துடித்துள்ளனர்.