மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. மட்டன் சாப்பிட்ட 5 வயது சிறுமி மரணம்..! 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!
ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அல்லூரி சீதாராம்ராஜி மாவட்டம், அரக்குலோயா மண்டல் என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் இன்று ஆட்டுக்கறி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் திடீரென அனைவருக்கும் உடல்நிலை மோசமாகவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் மீனாட்சி என்ற 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக ஆராய்ந்தும் வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மட்டன் சாப்பிட்டதில் சிறுமி ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.