மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாம்பழம் கேட்டு தொல்லை செய்த ஐந்து வயது சிறுமி... ஆத்திரத்தில் சித்தப்பா செய்த கொடூர சம்பவம்...
உத்திரப் பிரதேச மாநிலம் ஷாமிலி அடுத்த கெடா குரு தான் என்கிற கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் கைரு நிஷா. 5 வயது சிறுமியான நிஷாவின் பெற்றோர் வீட்டில் இல்லாததை அடுத்து தனது சித்தப்பா உமர் தீன் உடன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.
அப்போது உமர் தீன் வீட்டில் மாம்பழம் சாப்பிட்டு வந்துள்ளார். இதனைப் பார்த்த நிஷா தனக்கும் மாம்பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் உமர் தீன் சிறுமிக்கு மாம்பழங்களை கொடுக்காமல் சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் தனக்கு கொஞ்சமாவது மாம்பழம் வேண்டும் என்று சிறுமி உமர் தினுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உமர் தீன் அங்கே இருந்த கட்டையால் சிறுமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். அதில் சிறுமி மயங்கி கீழே விழுந்துள்ளார். இருப்பினும் ஆத்திரம் தீராத உமர் தீன் சமையலறைக்குச் சென்று ஒரு கத்தியை எடுத்து வந்து சிறுமியின் கழுத்தை அறுத்து உள்ளார். சிறுமியின் சடலத்தை கோணிப்பையில் கட்டி தூக்கி சென்று அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வீசி இருக்கிறார்.
அதன் பின்னர் எதுவுமே தெரியாதது போல் வீட்டில் உட்கார்ந்து இருந்திருக்கிறார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர் மகளைக் காணவில்லை என்று பல இடங்களில் தேடி பார்த்திருக்கிறார்கள். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததை அடுத்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு உமர் தீனின் நடத்தையும் சந்தேகம் வந்துள்ளது. அதனையடுத்து உமர் தீனிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது உமர் தீன் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கதறித் துடித்து உள்ளனர். பின்னர் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்து உமரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.