மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
25000V மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேர் உடல் கருகி பலி; அலட்சியத்தால் நடந்த சோகம்.!
இரயில் வழித்தட உயர்மின் பாய்ந்ததால் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள நிஷித்பூர் இரயில் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கோமக் கிராமம் அருகே இன்று இரயில்வே பணிகள் நடைபெற்றுள்ளது.
ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் பணியை மேற்கொண்டிருந்த நிலையில், இரயில்வே கோட்டத்திற்கு தகவல் தெரிவிக்காமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.
இதனால் பணியின் போது எதிர்பாராத விதமாக 25000V மின்சாரம் பாய்ந்ததில், 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த இரயில்வே அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிஷித்பூர் இரயில்வே அதிகாரிகள் பலியான தொழிலாளர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக்க அனுப்பி வைத்தனர். மேற்படி விசாரணை நடந்து வருகிறது.