ஒரே வீட்டில் 5 சிறுவர்கள் உட்பட 6 சடலங்கள் மீட்பு! கதறி துடிக்கும் உறவினர்கள்! வெளியான பதறவைக்கும் சம்பவம்!



6 person dead in bridge blast in loni

உத்திரப்பிரதேச மாநிலத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ப்ரிட்ஜ்  வெடித்து 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் கஷியாபாத் லோனி நகரில் உள்ள வீட்டில் 40 வயது நிறைந்த பர்வீன் மற்றும் பாத்திமா(12), ஷாயிமா(10),  ரதியா(8),  அப்துல் அசீம்(8) மற்றும் அப்துல் அகத்(5) ஆகியோர் இருந்துள்ளனர். அப்பொழுது வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கவனிக்காமல் அனைவரும் வீட்டினுள்ளே இருந்துள்ளனர். 

short circuit

அப்போது வீடு முழுவதும் தீ பரவிய நிலையில், அவர்களால் வீட்டிலிருந்து தப்பிக்க முடியவில்லை. மேலும் ப்ரிட்ஜ் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதனைத் தொடர்ந்து மீட்பு குழுவினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், அனைவரும் தீப்பிடித்து எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களின் உடலை மீட்டுள்ளனர். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர்.