மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொதிக்கக் கொதிக்க சாம்பார் இருந்த அண்டாவில் விழுந்து, துடிதுடித்து உயிரிழந்த 6 வயது சிறுவன்! பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்!
ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு வேளையின் போது 6 வயது நிறைந்த புருஷோத்தமன் ரெட்டி என்ற சிறுவன் மதிய வாங்க அவரது நண்பர்களுடன் வரிசையில் நின்று கொண்டு இருந்துள்ளார்.
அப்பொழுது சிறுவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த தள்ளுமுள்ளுவில் சிக்கிய புருஷோத்தமன் நிலைதடுமாறி தனது முன்பிருந்த கொதிக்கும் சாம்பார் இருந்த அண்டாவில் தவறி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் புருஷோத்தமனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடியுள்ளனர்.
ஆனால் சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர்கள் இதனை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம், கண்காணிப்பு இல்லாததால் தனது குழந்தை இறந்துவிட்டதாக பெற்றோர்கள் கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.