மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ரோட்டில் நிர்வாணமாக ஓட வைத்த கொடூரன்! போலீஸ் வலைவீச்சு
டெல்லியில் 7 வயது சிறுமியை கடத்தி சிறுமியின் வீட்டுக்கு அருகே உள்ள மற்றொரு வீட்டு மொட்டை மாடியில் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து சிறுமியை ரோட்டில் நிர்வாணமாக போக செய்த சைகோ கொடூரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள காசிபூர் என்னும் ஒரு ஊரில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் அந்த பகுதியில் இருந்த மளிகை கடைக்காரர், எதிர் வீட்டில் இருந்து அந்த சிறுமி ஆடையின்றி இறங்கி வருவதை கண்டுள்ளார். உடனே அவர் ஓடிபோய் சிறுமியை போர்வையால் போர்த்தி அவளது பெற்றோரிடம் அழைத்து சென்றுள்ளார்.
அந்த சிறுமிக்கு அடிவயிற்றில் வலி ஏற்படவே, சிறுமியை பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பலாத்காரம் செய்யபட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த மருத்துவர்கள் சிறுமியிடம் நடந்த சம்பவத்தைப் பற்றி விசாரித்துள்ளனர். அப்போது அழுதுகொண்டே பேசிய அந்த சிறுமி போலிசாரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.
சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட அந்த சிறுமி இரவு 9:45 மணிக்கு பக்கத்தில் இருக்கும் கடைக்கு பால் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது தெரு முனையில் நின்றுகொண்டிருந்த அடையாளம் தெரியாத அந்த நபர் சிறுமியிடம் ஒரு பாக்கெட் சாக்லெட் கொடுத்துள்ளார். முதலில் மறுத்த சிறுமியிடம், நான் சொல்வதைக் கேட்டால் இதே போல் நிறைய சாகலெட் தருவதாக அந்த நபர் சிறுமியை ஏமாற்றி அருகில் இருந்த வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றுள்ளான்.
அங்கு சிறுமியிடம், சத்தம் போட்டால் மாடியிலிருந்து தூக்கி வீசிவிடுவேன் என மிரட்டிய அந்த கொடூரன், சிறுமியின் ஆடைகளை உருவி பலாத்காரம் செய்துள்ளான். உயிருக்கு பயந்த சிறுமி சத்தம் போடாமல் இருந்துள்ளார். பின்னர் சிறுமியின் ஆடைகளை கொடுக்க மறுத்த அந்த காட்டுமிராண்டி, சிறுமியை நிர்வாணமாகவே கீழே அழைத்து வந்து கதவின் அருகே விட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளான்.
சிறுமியை கடைக்காரர் பார்த்து அருகில் செல்லும் வரை அந்த கொடூரனும் தூரத்தில் நின்று நடந்தவற்றை கவனித்துள்ளான். பின்னர் அவர் அவனை நோக்கி செல்ல முயல்வதற்குள் அவன் ஓடிவிட்டான். அவனை இதற்கு முன்னர் அந்த பகுதியில் பார்த்ததில்லை என்று சிறுமியும், கடைக்காரரும் போலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலிசார் 100 பேர் கொண்ட தனி படையை அமைத்து குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த வீட்டு உரிமையாளரிடமும் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.