#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இஸ்ரேல் நாட்டு 21 வயது காதலியை கொலை செய்த 75 வயது காதலன்.. காரணம் என்ன?
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் கிருஷ்ண பிரசாத். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் யோகா பயிற்சியாளராக இருந்தபோது 21 வயது இஸ்ரேலிய பெண் ஒருவரை சந்தித்து காதலித்துள்ளார். இதனையடுத்து யோகா பயிற்சியாளரின் சொந்த புராண கேரளா மாநிலம் கொல்லம் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கே 15 ஆண்டுகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில், தனது காதலியை மீண்டும் அவரது நாட்டிற்கே சென்று விடும்படி முதியவர் கூறியுள்ளார். மேலும் தனக்கு வயதாகி விட்டதால் தான் இருந்த பிறகு உன்னை யாராவது தாக்கப்படும் என்று அவர் இஸ்ரேலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் அந்த காதலி இஸ்ரேலுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ண பிரசாத் தனது காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனிடையே சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் இருவரும் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் இஸ்ரேல் நாட்டுப் பெண் உயிரிழந்ததால் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கிருஷ்ண பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.