#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆட்டோவில் அறுந்துவிழுந்த மின்கம்பி... மின்சாரம் பாய்ந்ததால் 8 பேர் உடல்கருகி பலி..!
ஆட்டோவின் மீது மின்கம்பி விழுந்ததில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் விவசாய பணிக்காக 8 பேர் ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது தாடிமரி மண்டலம் கொண்டம்பள்ளி அடுத்து ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, திடீரென உயர் மின்னழுத்தகம்பி ஆட்டோவின் மீது அறுந்து விழுந்துள்ளது.
இதில் ஆட்டோவில் மின்சாரம் பாய்ந்ததில் உள்ளே இருந்த 8 பேரும் உடல் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் ஆட்டோவில் இருந்த 8 பேரும் உடல்கருகி உயிரிழந்ததால், யாரையும் மீட்க முடியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.