மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா: 6 கி.மீட்டருக்கு ரூ.9200.. பிடிவாதம் பிடித்த ஆம்புலன்ஸ் ட்ரைவர்.. உதவி செய்த மருத்துவர்கள்!
கொல்கத்தாவில் ஒரு மருத்துவமனையில் இருந்து 6 கி.மீ தொலைவில் இருக்கும் வேறு ஒரு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ட்ரைவர் 9200 ரூபாய் கேட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு சகோதரர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே அவர்களை சிகிச்சைக்காக 6 கி.மீ தொலைவில் உள்ள கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவர்களது தந்தை ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்தார்.
கொரோனா பாதித்த சிறுவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றிய பிறகு ஆம்புலன்ஸ் ட்ரைவர் சிறுவர்களின் தந்தையிடம் 9200 ரூபாய் கேட்டுள்ளார். அவ்வளவு தொகையை அவர்களால் கொடுக்க முடியாது என்றதும் சிறுவர்களின் தாயாரை கீழே இறக்கிவிட்ட ட்ரைவர் ஒரு சிறுவனிற்கு வைத்திருந்த செயற்கை சுவாச கருவியையும் நீக்கிவிட்டார்.
பின்னர் நடந்தவற்றை சிறுவர்களின் தந்தை மருத்துவர்களிடம் தெரியப்படுத்தினார். அதன்பின்னர் மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் ட்ரைவரிடம் பேச்சுவார்ததை நடத்தி 2000 ரூபாய் மட்டும் வசூலிக்குமாறு கூறியுள்ளனர்.