மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இறுதிச் சடங்கில் எழுந்து அமர்ந்த 102 வயது மூதாட்டி... அதிர்ச்சியில் தெறித்து ஓடிய உறவினர்கள்...!
இறுதி சடங்கில் எழுந்து உட்கார்ந்த 102 வயது மூதாட்டியை பார்த்து தலை தெரிக்க ஓடிய உறவினர்கள்.
உத்தரகாண்ட் மாநிலம் நர்சன் குர்த் பகுதியை சேர்ந்தவர் வினோத். கடந்த சில நாட்களாக இவரது தாயார் ஞானதேவி (102) உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். திடீரென ஞானதேவி மயங்கி விழுந்துள்ளார். உடனே மருத்துவரை அழைத்து வந்து பரிசோதித்தனார்.
மருத்துவர் ஞானதேவி இறந்து விட்டதாக கூறினார். இதைக் கேட்ட குடும்பத்தினர் நன்றாக வாழ்ந்த மனுஷி மேலும் கல்யாண சாவு என்பதால் சிறப்பா அடக்கம் பண்ணனும் என்று கூறி, ஞானதேவியின் மரணம் குறித்து உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில் ஏராளமானோர் ஞானதேவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்தனர். இறுதி சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த குடும்பத்தினர், ஞான தேவியின் உடலை பாடையில் கிடத்தினார். அப்போது திடீரென அவரின் உடலில் சலனம் ஏற்பட்டது. கொஞ்சம் உடல் குலுங்கியதும் அவர் கண்களைத் திறந்து பார்த்துள்ளார்.
இந்த காட்சியை பார்த்த அனைவரும் ஆதிர்ச்சியில் உறைந்தனர். சிலர் பயத்தில் தலை தெரிக்க ஓடினர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் அங்கு சந்தோஷமான சூழல் நிலவியது. அவருடைய அம்மா திரும்ப எழுந்ததில் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஞானதேவியின் குடும்பத்தில் மட்டுமல்லாமல் கிராமத்திலும் மூதாட்டி உயிர்த்தெழுந்ததை கொண்டாடி வருகின்றனர். தற்போது ஞானதேவி பழையபடி சாதாரனமாக நன்றாக சாப்பிட்டு வருகிறார். மொத்த கிராமமும் செத்துப் பிழைச்ச பாட்டியை தினமும் சென்று பார்த்து ஆசி பெற்று வருகின்றனர்.