ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட 15 வயது மாணவன்... ஆசிரியர்கள் காரணமா.?
மேற்குவங்க மாநிலத்தில் தனியார் பள்ளி மாணவன் பள்ளி வளாகத்தில் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் உண்மை வெளியாகி இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு பர்கனாஸ் பகுதியில் உள்ள கஸ்பா என்ற இடத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஷேக் ஷான்(16) என்ற மாணவன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவன் மாலை நேரத்தில் திடீரென பள்ளியின் ஆறாவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்தான்.
இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பதற்றமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. கீழே விழுந்த மாணவனை உடனடியாக மீட்ட ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. மாணவன் சுமாராக படித்ததால் அதே பள்ளியை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் மாணவனை தொடர்ந்து கேலி செய்து வந்ததாகவும் இதனால் ஏற்பட்ட விரக்தியில் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தங்கள் மகனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவனது மரணத்திற்கு காரணமான இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.