மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் இரயிலில் 30 வயது இளம்பெண் தொடர்ந்து 3 முறை பலாத்காரம்; 22 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்..!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பகாரியாவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த 30 வயது பெண்மணி கழிவறையை உபயோகம் செய்ய சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற 22 வயது இளைஞர் பெண்ணை பலவந்தபடுத்தி கழிவறைக்குள் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இரண்டு முறை கயவன் தொடர்ந்து அத்துமீறிய நிலையில், ரயிலில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் பெண்ணுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்மணி கயவனிடமிருந்து தப்பிவந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு ரயிலில் தஞ்சம் புகுந்தபோதும் கயவன் விடாமல் அத்துமீறி இருக்கிறார்.
இதனை அடுத்து பெண்மணி மகிகார் ரயில்வே நிலையத்தில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விரைந்து வந்து இளைஞரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.