#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரோடு காண்ட்ராக்டில் கைவைத்த ஒப்பந்தத்தார்கள்.. கைகளை வைத்து பெயர்த்தாலே உதிரும் தார் சாலைகள்.!
அரசின் நிதியில், மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படும் தார் சாலை தரம்கெட்டு அமைக்கப்பட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தில், கிராமப்புற தார் சாலைகள் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசின் சார்பில் சாலைகள் அமைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், அரசின் சார்பில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், அவர்கள் புதிதாக அமைத்த சாலை மிகவும் தரம் குறைந்து இருப்பதாக உள்ளூர் மக்கள் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
#WATCH कर्नाटक: मांड्या ज़िले के गांव में ठेकेदारों और इंजीनियरों द्वारा खराब सड़क बनाने के बाद ग्रामीणों ने सड़क का एक हिस्सा हाथों से उखाड़ा। (04.02) pic.twitter.com/ZGGYmrNGIF
— ANI_HindiNews (@AHindinews) February 4, 2022
மேலும், கைகளால் பெயர்த்து எடுத்தாலே வந்துவிடும் வகையில் அமைக்கப்பட்ட தார் சாலை தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தார்சாலையை அகற்றி, உரிய முறையில் தரமான சாலைகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.