திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தீப்பற்றி எரிந்த கார்...கருகி பலியான 4 உயிர்கள்..காவல்துறை விசாரணை.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கார் லாரியுடன் மோதி தீப்பிடித்த விபத்தில் நான்கு பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இறந்தவர்களை அடையாளம் காணும் பணி மும்முறமாக நடைபெற்று வருகிறது.
உத்திர பிரதேசம் மாநிலம் சஹரான்பூரில் உள்ள டேராடூன்- அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் நான்கு பேருடன் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரியுடன் மோதியது. இந்த விபத்தில் கார் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்து தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். ஆயினும் கார் முற்றிலுமாக எரிந்தது. இதனைத் தொடர்ந்து கேஸ் கேட் இயந்திரத்தை பயன்படுத்தி காரில் இருந்த உடல்களை மீட்டனர்.
பின்னர் மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. உடல்கள் முற்றிலுமாக எரிந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு கண்ணாடிகளுமே அடைக்கப்பட்டு இருந்ததால் விபத்தில் சிக்கிய உடன் உடனடியாக அவர்களால் காரில் இருந்து வெளியேற முடியவில்லை என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.