மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சினிமா பாணியில் கால்வாயில் கவிழ்ந்த கார்.. 5 உயிர்கள் பறிபோன சம்பவம்.. கர்நாடகாவில் சோகம்..!
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் திப்தூர் பகுதியை சேர்ந்த சந்திரப்பா, கிருஷ்ணப்பா, தனஞ்சய், பாபு, ஜெயண்ணா ஆகிய ஐந்து பேரும் மைசூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று ஊர் திரும்பி உள்ளனர்.
அப்போது அந்தக் காரானது மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா பகுதி அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள காவிரி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இதனையடுத்து இந்த விபத்து குறித்து அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கால்வாயில் விழுந்தவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் அவை பலனளிக்காததால் தீயணைப்பு துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கால்வாயில் விழுந்த காரை மீட்டனர். மேலும் அதில் பயணித்த 5 பேரும் மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.