திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி.. தாய், தந்தையை உதவிக்கு அழைத்து வந்த சிறுவன்..! தெய்வமாக குழந்தை..!!
குழந்தைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள் என்ற வாக்கு நம்மிடையே உண்டு. விபரம் அறியாத வயதில், தன்கண்முன் எவரேனும் கஷ்டப்படுவதை பார்த்தல், அவர்களுக்கு ஏதேனும் தன்னால் இயன்ற உதவியை செய்ய அந்த பிஞ்சு மனம் துடிக்கும். தன்னிடம் எதுவும் இல்லை என்ற பட்சத்தில், கஷ்டத்தில் உள்ளோர்களை கட்டியணைத்து ஆறுதல் கூறும்.
முகநூலில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், கர்ப்பிணி பெண்ணொருவர் நடக்க இயலாமல் சாலையோரத்தில் பிரசவ வலி ஏற்பட்டு துடிக்க, அவ்வழியாக சென்ற சிறுவன் பெண்ணிடம் பேசுகிறார். பெண்மணி கூறியதை கேட்டு ஓடிச்சென்ற சிறுவன், தனது தாய் - தந்தையை விரைந்து அழைத்து வருகிறார்.
நிகழ்விடத்திற்கு வந்த சிறுவனின் தாய் - தந்தை நிலைமையை சுதாரிக்க, பெண்ணுக்கு உதவியாக இருக்க தனது மனைவியை கீழே இறக்கிவிட்டு, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல விரைந்து ஆட்டோவை அழைத்து வருகிறார். சிறுவனின் தந்தையை காணும் போது, அவர் காவல் அதிகாரி என்பது உறுதியாகிறது.
Watch Video : https://www.facebook.com/watch/?v=4508406469285946