திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இரண்டாவது மனைவியை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர கணவன்... ஜார்கண்டில் பரபரப்பு...!!
காதலித்து திருமணம் செய்த சில நாட்களில் இரண்டாவது மனைவியை கணவன் துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் ஜார்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டம் போரியோ பகுதியில் வசித்து வருபவர் தில்தார் அன்சாரி (28). இவர் ரூபிகா பஹாடின் (22). என்ற பெண்ணை காதலித்து சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், போரியோ சந்தாலியில் புதியதாக கட்டப்படும் அங்கன்வாடி மையத்தின் பின்புறத்தில், அங்கு சுற்றித் திரிந்த நாய்கள் மனித கால் துண்டுகளை இழுத்து செல்வதாக அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அங்கன்வாடி கட்டிடத்தின் பின்புறத்தில் சிதறிக் கிடந்த உடல் பாகங்களை சேகரித்தனர்.
இச்சம்பவம் குறித்து சாஹிப்கஞ்ச் காவல் துறை எஸ்பி அனுரஞ்சன் கிஸ்போட்டா கூறுகையில், தில்தார் அன்சாரிக்கும், ரூபிகா பஹாடினுக்கும் சில நாட்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. இந்நிலையில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தின் பின்புறத்தில் ரூபிகா பஹாடின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. நாய்கள் அவற்றை இழுத்து சென்றன. இதுவரை 13 உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. மேலும் உடலின் பல்வேறு பாகங்கள் மாவட்டத்தின் பல இடங்களில் வீசப்பட்டுள்ளன.
தலை மற்றும் சில உடல் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை. விசாரணையில் தில்தார் அன்சாரி மற்றும் சிலர் ரூபிகா பஹாடினை கொன்று துண்டு துண்டாக வீசி எறிந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. தும்காவிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள உடலின் பாகங்கள் தேடப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.