திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குடும்ப சண்டையில் கணவனின் நாக்கை கடித்து துப்பிய கொடூர மனைவி...!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாகூர்கன்ச் என்கிற பகுதியில் வசித்து வருபவர் முன்னா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சல்மா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் சல்மா தன் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன் பிறகு மனைவியை வீட்டிற்கு வருமாறு பலமுறை அழைத்தார்.ஆனால் சல்மா வராமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் முன்னா இன்று தன் மாமியார் வீட்டிற்கு சென்று குழந்தையோடு விளையாடி கொண்டிருந்தார். இதை பார்த்துவிட்டு சல்மா இனிமேல் குழந்தையை சந்திக்க வரக்கூடாது என்று முன்னாவைப் பார்த்து கோபமாக திட்டியுள்ளார்.
அப்போது முன்னா சல்மாவை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். வர முடியாது என்று சல்மா பிடிவாதமாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த சல்மா, முன்னாவை கடுமையாக தாக்கி தன் பற்களால் முன்னாவின் நாக்கை கடித்து வெளியே துப்பியுள்ளார். நாக்கு துண்டானதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி முன்னாமயங்கி விழுந்துள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த முன்னாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சல்மாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.