திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
16 நாட்கள் அடைத்துவைத்து... உறவுக்கார இளைஞர் செய்த வெறி செயல்".!
டெல்லியை சார்ந்த 19 வயது இளம் பெண்ணை அவரது உறவினரே 16 நாட்கள் கடத்திச் சென்று கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த நபரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
டெல்லியை சார்ந்த 19 வயது இளம் பெண்ணை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை இது தொடர்பாக தீவிரமான விசாரணையில் இறங்கியது. இந்நிலையில் காணாமல் போன இடம் பெண் உத்தர பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் அந்தப் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். மேலும் அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தப் பெண்ணை காரில் கடத்திச் சென்ற நபர் 16 நாட்களாக கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
அந்தப் பெண்ணை கடத்திச் சென்றது அவரது உறவினர் தான் என்பதும் காவல்துறையின் விசாரணையின் மூலம் உறுதியாகி இருக்கிறது. அவரை கடத்திச் சென்று ஒரு அறையில் கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். தற்போது அந்த நபர் தப்பி ஓடிவிட்டார் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.