மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இப்படி கூட 'ஷாக்' ட்ரீட்மெண்ட் கொடுப்பாங்களா."? நிர்வாணமாய் மருத்துவமனையில் சுற்றித் திரியும் மருத்துவர்.!
தற்போது மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நிர்வாணமாக மருத்துவ வளாகத்திற்குள் நடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் என்று அழைக்கப்படும் அவுரங்காபாத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, அந்த மருத்துவர், போதைக்கு அடிமையானவர் என்றும் அவுரங்காபாத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பிட்கினில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
45 வயதாகும் அந்த மருத்துவர், குடிபோதையில் இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது. மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளில் பதிவான அந்த வீடியோவில், தனது ஆடைகளைக் களைந்து அந்த மருத்துவர் மருத்துவ வளாகத்திற்குள் நிர்வாணமாக சுற்றித் திரிகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த செயலில் ஈடுபட்ட மருத்துவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மருத்துவரின் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட சிவில் அறுவை சிகிச்சை நிபுணரும், மாவட்ட சுகாதார சேவைகளின் தலைவருமான டாக்டர் தயானந்த் மோதிபவ்லே தெரிவித்துள்ளார்.