மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேரளா: விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று தமிழர்கள்... அதிர்ச்சிகரமான சம்பவம்.!!
சென்னையில் இருந்து சென்ற குடும்பத்தினர் கேரளாவின் திருச்சூரில் தங்கியிருந்த விடுதி அறையிலேயே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கேரள போலீஸாரால் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சார்ந்தவர் சந்தோஷ் பீட்டர் வயது 57. இவர் தனது மனைவி சுமி(50) மற்றும் மகள் ஐரின்(20) ஆகியோருடன் கேரள மாநிலம் திருச்சூரில் சென்று விடுதி ஒன்றில் அரை எடுத்து தங்கி இருக்கிறார். ஏழாம் தேதியோடு அறையை காலி செய்வதாக விடுதி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எட்டாம் தேதி ஆகியும் அவர்கள் அறையை காலி செய்யாததால் விடுதி நிர்வாகத்தினர் அறைக்குச் சென்று கதவைத் தட்டி உள்ளனர்.அப்போது யாரும் கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகம் திருச்சூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது விடுதி அறையில் சந்தோஷ் பீட்டர் தூக்கில் தொங்கி இருக்கிறார். அவரது மனைவி படுக்கையில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரது மகள் குளியல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களது சடலங்களை கைப்பற்றிய காவல் துறை பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த மூன்று பேர் கேரளா விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.