ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கார் மீது டிரக் மோதி பயங்கர விபத்து... மணமகன் உட்பட 2 பேர் பலி.!
உத்திர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற கோர விபத்தில் மணமகன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் திருமணத்திற்கு சென்ற ஒரு காரின் மீது ட்ரக் மோதியதில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மணமகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . மேலும் இன்னொரு நபரும் சம்பவ இடத்தில் பலியானார்.
மேலும் 7 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களில் ஐந்து பேரை நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.
இந்தக் கோர விபத்தில் மரணம் அடைந்த மணமகன் உட்பட இன்னொரு நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.