திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆறாவது மாடியில் இருந்து குதித்து சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை...!!
கல்லூரி கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூருவை சேர்ந்தவர் வாணி (23). இவர் விஸ்வேஷ்வரபுரா சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வாணி தினமும் கல்லூரிக்கு தவறாமல் சென்று வந்த நிலையில் நேற்று அவர் கல்லூரிக்கு வராமல் இருந்துள்ளார். இதை தொடர்ந்து வாணி நேற்று அந்த பகுதியில் இருக்கும் தொழில்நுட்ப பல்கலைக்கழக கட்டிடத்தின் 6-வது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அங்கிருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து வி.வி.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். சோதனையில் மாணவி கைப்பட எழுதிய கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த சிலநாட்களாக மாணவி சசோகமாக இருந்ததாக கல்லூரி நிர்வாகம் காவல்துறையினரிடம் கூறினர். மேலும் மாணவி எதற்காக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.