மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவமே !!! காதலியால் கழட்டி விடப்பட்ட காதலன்..! லைவ் வீடியோவில் காதலன் எடுத்த விபரீத முடிவு..!
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்ச் மாவட்டத்திலுள்ள பகவான்பூரில் வசிக்கும் இளைஞன் ஒருவன் தனது காதலி தன்னை காதலித்து ஏமாற்றியதாக குற்றம் சாட்டி பேஸ்புக் லைவ் மூலம் இயந்திரத்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த பேஸ்புக் நேரலையின் போது அந்த இளைஞன் தனது காதலியையும் அவளது குடும்ப உறுப்பினர்களையும் கடுமையாக திட்டி உள்ளார். ஏமாற்றத்தை தாங்க முடியாமல் மனவேதனையில் இருந்த அந்த இளைஞர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு இது தொடர்பாக விசாரித்ததில் அந்த இளைஞன் காதலித்த பெண்ணிற்கு வேறொரு நபருடன் திருமணம் நடக்க இருப்பதாகவும், அதற்கு காதலியும் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் வேதனை அடைந்த இளைஞர் தனது பேஸ்புக் நேரலையில் இயந்திரத்தால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..