மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலனை சந்திக்க கிராமத்தையே இருளாக்கிய காதலி!! கிரமமக்கள் எடுத்த அதிரடி முடிவு!!
பீகார் மாநிலத்தில் உள்ள பெத்தியா என்னும் பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி. இவர் ராஜ்குமார் என்னும் வாலிபரை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் எனினும் சந்திப்பதற்கு நேரமும், இடமும் கிடைக்காததால் இரவு நேரத்தில் அவர்களது கிராம மின் இணைப்பை துண்டித்து அந்த இருளை பயன்படுத்தி ப்ரீத்தி அவரது காதலர் ராஜ்குமாரை சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்ந்து நடந்து வந்ததால் கிராம மக்கள் மின்துறை அலுவலகத்தில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். மின்துறை அதிகாரி கிராமத்திற்கு வந்து மின்கம்பத்தை சரி பார்த்துள்ளார். ஆனால் அனைத்தும் சரியாக தான் இருக்கிறது என்று கூறி திரும்பிச் சென்றுள்ளார்.
பின்னர் ப்ரீத்தி தான் மின் இணைப்பை துண்டித்து விட்டு அவரது காதலரை பார்க்க செல்கிறார் என்பதை அறிந்த கிராம மக்கள், மீண்டும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் வரை காத்திருந்தனர்.
வழக்கம்போல் இந்த முறை ப்ரீத்தி மின் இணைப்பை துண்டித்துள்ளார். ஆனால் இம்முறை கிராம மக்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர். பின்னர் இருவரிடமும் இது குறித்த விசாரித்தனர்.
பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும் சந்திக்க முடியாத காரணத்தால் இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.