திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவியை காதலனிடம் ஒப்படைத்த பாசக்கார கணவன்.. அவுங்க உணர்வுக்கும் மதிப்பு கொடுங்க பாஸ்..!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பாலமு மாவட்டம், மனாட்டு பகுதியில் வசித்து வருபவர் சனோஜ் குமார் சிங். அப்பகுதியை சேர்ந்த பெண்மணி பிரியங்கா குமாரி.
தம்பதிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், புதுமண தம்பதிகள் தங்களின் வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றனர்.
திருமணத்திற்கு முன்பு கடந்த 2012ம் ஆண்டு முதலாகவே பிரியங்கா ஜிதேந்திரா என்பவரை காதலித்து வந்த நிலையில், அவரை திருமணத்திற்கு பின்பும் மறக்க இயலாமல் அவதிப்பட்டுள்ளார். அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார்.
இதனால் பிரியங்கா தனது காதலர் ஜிதேந்தருடன் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு இருந்த நிலையில், விவகாரம் சனோஜ் குமாருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பிரியங்கா குமாரியின் பெற்றோரை அழைத்து பேசிய சனோஜ் குமார், மனைவியின் விருப்பப்படி காதலருடன் குடும்பம் நடத்த அனுப்பி வைத்தார். இந்த விசயம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கான விஷயமாக இருக்கிறது.