மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடற்பயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு... சோகத்தில் குடும்பத்தினர்!!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் உணவக உரிமையாளரான பிரவீன் ரகுவன்ஷி. இவர் தனது வீட்டின் அருகில் இருக்கும் உடற்பயிற்சி மையத்திற்கு உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக சென்றுள்ளார்.
அங்கு அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே மூச்சு திணறல் ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் இருந்தவர்கள் உடனே பிரவீனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு பிரவீனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் மருத்துவர்கள் பிரவீன் மாரடைப்பால் தான் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.