மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரீலிஸ் பதிவிட தண்டவாளத்திற்கு நெருக்கமாக வீடியோ; இரயிலில் அடிபட்டு இளைஞர் பரிதாப பலி.!
ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது ஆபத்தானது. ரயில் பயணங்களின் போது கதவு அருகே நிற்கக்கூடாது, தண்டவாளங்களை அலட்சியமாக கடக்க கூடாது.
அதற்காக வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை அல்லது நடைமுறையை பயன்படுத்திய கடக்க வேண்டும் என்பதெல்லாம், ரயில்வே துறை சார்பாக பலமுறை ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வுகளாக இருந்து வருகின்றன.
ஆனால், இன்றளவில் இருக்கும் இணைய உலகில் ரீல்ஸ் மோகத்தில் அடிமையாக இருக்கும் இளம்தலைமுறை, எதை பார்த்தாலும் வீடியோ எடுப்பதும், சாகசங்கள் போன்ற துணிச்சலான காரியங்களை செய்வதாக நினைத்து தங்களின் உயிரை பணயம் வைப்பதும் தொடர்கதையாகி இருக்கிறது.
இந்நிலையில், ரயில் முன்பு நடந்து வருவது போல ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த இளைஞர், கேமரா கண் முன்னே ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த விபரம் இல்லை. அவை விசாரிக்கப்பட்டு வருகிறது.
நமது பக்கத்தில் வீடியோ இணைக்கப்படவில்லை.