மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இறந்த பின்னும் உயிர் வாழும் ஒன்றரை வயது குழந்தை.. உறுப்பு தானம் செய்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..!
ஆந்திர மாநிலம் நெல்லூரில் வசித்து வரும் தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி வைத்திருக்கும் ஸ்டாண்ட் மீது ஏறி விளையாடிய போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்படவே பெற்றோர்கள் குழந்தையை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து குழந்தைக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அக்குழந்தை மூளைச்சாவு அடைந்தது. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகமானது குழந்தையின் உறுப்புகளை தானமாக கொடுக்க பெற்றோரிடம் அனுமதி கேட்கவே அவர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து குழந்தையின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களும் தானமாக பெறப்பட்டன.
இந்நிலையில் தானமாக பெறப்பட்ட கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 மாத குழந்தைக்கும், சிறுநீரகங்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது பெண்ணுக்கும் பொருத்தப்பட்டது. மேலும் குழந்தையின் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.