#வீடியோ: நீங்க மட்டும் தான் கட்டிப்பிடிவைத்தியம் செய்வீர்களா?.. ஆதரவற்ற மனிதனுக்கு ஆதரவு கூறும் நாய்.!



a-pet-dog-approaches-a-homeless-man-and-hugs-him-cute-v

நாய்கள் மனிதர்களின் நல்ல நண்பர்கள் என்றும் கூறலாம். ஒருமுறை அதற்கு உணவளித்து, அதன் தலையை தடவிட்டு வந்தால் போதும், எத்தனை வருடம் கழித்து அதனை பார்க்க சென்றாலும் நம்முடன் பழைய அன்போடு, இத்தனை நாள் எங்கே எண்ணைவிட்டுச்சென்றாய்? என்று வாயால் கேட்க முடியாமல் பாசத்தை பொலிந்து தள்ளிவிடும். 

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் தான் அன்போடு இருக்கும் என்று கிடையாது. தெருக்களில் உள்ள நாய்களும் அன்பு கொண்டவைதான். அதனின் அன்பை பல இடங்களில் வெளிப்படுத்த சூழல் கிடைத்தது இல்லை என்பதே நிதர்சனம். 

அவைகளுக்கு கிடைத்த வாழ்நாள் அனுபவத்தால், அதன் மனதில் உள்ள வலியால் முதல் முறையாக பார்க்கும் போது குரைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும், வாகனத்தை துரத்தி செல்லும். அவைகளுடன் பழகிவிட்டால் அது நமக்கு எந்த தீங்கும் செய்யாது.

நாய்களின் மனதில் உள்ள பயமே அதனை மூர்க்கத்தனமாக சில நேரங்களில் காண்பிக்கிறது. தற்போது, வளர்ப்பு நாயொன்று சாலையோரம் ஆதரவின்றி இருக்கும் நபரை கட்டியணைத்து ஆதரவு தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த விடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்த நந்தா பதிவு செய்துள்ளார்.