மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேரளாவில் பரபரப்பு..5 வருட காலமாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு வேறொரு இளைஞருடன் திருமணத்தை முடித்த கடை ஓனர்..!
கேரள மாநிலம் அம்பலப்புழா பகுதியில் வசித்து வருபவர் முகமது நிசாம். இவர் அப்பகுதியில் பெயிண்ட் கடை ஒன்று வைத்து உள்ளார். நிசாமின் கடையில் அதே பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த சிறுமி தனது 16 வயதிலிருந்து கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் அந்த சிறுமியின் ஏழ்மை நிலையை பயன்படுத்திக்கொண்ட முகமது நிசாம் பண ஆசை காட்டி சிறுமியை தன்னுடைய ஆசைக்கு பலமுறை இணங்க வைத்துள்ளார். இதனையடுத்து நிசாமின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே அந்த சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்ற நிசாம் இனி இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் மீண்டும் வேலைக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் மீண்டும் வேலைக்கு சென்ற அந்த சிறுமியை நிசாம் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கிடையில் 21 வயதை அடைந்த அந்த இளம்பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அப்போது முகமது நிசாம் தனக்குத் தெரிந்த ஒரு வாலிபர் இருப்பதாக கூறி இளம்பெண்ணுடன் அந்த நபருக்கு முகமது நிஷாமின் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்றுள்ளது. இதனால் ஆலப்புழாவிலுள்ள அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூன்று மாதகால கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் விசாரித்தபோது அந்த இளம் பெண் நடந்தவற்றையெல்லாம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் முகமது நிசாமை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து இளம் பெண்ணின் உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்த நிசாமை ஆலப்புழா அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். மேலும் சிகிச்சைக்கு பின் நிசாமை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.