35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
காதலிக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம்; காதலியையும் அவரது தாயையும் கத்தியால் குத்திய காதலன்...!!
அந்திர மாநிலத்தில் காதலனை கைவிட்டு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முயன்ற காதலி மற்றும் அவரது தாயை வாலிபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் வசித்து வருபவர் 22 வயது இளம்பெண். தந்தை இறந்து விட்டதால் தனது தாயுடன் வசித்து வருகிறார். குண்டூர் அருகில் இருக்கும் ரெப்பள்ளியை சேர்ந்த சந்தீப் (26) என்பவரை அந்த பெண் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் சந்தீப்பை திருமணம் செய்ய மறுத்தார். அவரது தாய் மற்றும் உறவினர்கள் அறிவுரை சொல்லியும் அவர் ஏற்று கொள்ளவில்லை. இதை தொடர்ந்து ஊர் பெரியோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை ரத்து செய்து இருவரும் பிரிந்தனர்.
இதை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்தனர். இதை கேள்விப்பட்ட சந்தீப் ஆத்திரமடைந்தார். இதற்கிடையில் சாலையில் நடந்து சென்ற தன்னுடைய முன்னாள் காதலியிடம் வழிமறித்து சந்தீப் தகராறு செய்துள்ளார். மேலும் அடிக்கடி போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அந்த பெண் இதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். மேலும் சந்தீப், அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சந்தீப்பின் தொல்லையை தாங்க முடியாமல் அந்த பெண், தனது தாயுடன் சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்று குடியேறினார்.
இந்நிலையில் நேற்று அந்த பெண்ணும் அவரது தாயும் தனியாக வீட்டில் இருந்தனர். அப்போது சந்தீப் அங்கு வந்து அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். மேலும் எனக்கு கிடைக்காத நீ, யாருக்கும் கிடைக்க கூடாது என சொல்லி அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரி குத்தியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தாய், ஓடிவந்து தடுத்துள்ளார். சந்தீப் அவரையும் கத்தியால் குத்தியுள்ளார்.
பிறகு சந்தீப் அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து, ஐதராபாத் மியாபூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடம் வந்து மூவரையும் அங்குள்ள காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.