மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே... மிரட்டிய அத்தை.! ஸ்கெட்ச் போட்டு சம்பவம் செய்த மருமகள்.! உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மாமியார் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம் பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் கைது செய்யப்பட்ட இருவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரை அடுத்த பத்தரஹள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவர் தனது மனைவி ராஷ்மி மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி மஞ்சுநாத்தின் தாயார் லட்சுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தனது தாயாரின் சாவில் மர்மம் இருப்பதாகவும் தனது மனைவியின் மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறையில் புகார் அளித்தார் மஞ்சுநாத்.
இதனைத் தொடர்ந்து அவரது மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. மஞ்சுநாத்தின் மனைவி ராஷ்மி அவரது வீட்டின் மாடியில் குடியிருக்கும் அக்ஷய் என்ற இளைஞருடன் தகாத உறவில் இருந்திருக்கிறார். மேலும் அந்த இளைஞருக்கு பண உதவியும் செய்துள்ளார். இது மாமியாருக்கு தெரிய வரவே தனது மகனிடம் கூறி விடுவதாக மிரட்டி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தனது ஆண் நண்பர் அக்ஷய் துணையுடன் மாமியாருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக் கொடுத்து அவற்றுடன் தூக்க மாத்திரைகளையும் கலந்திருக்கிறார் ராஷ்மி. தூக்க மாத்திரை கலந்த உணவை சாப்பிட்ட பின் லட்சுமி மயங்கி விடவே ராஷ்மியின் காதலர் அக்ஷய் லட்சுமியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.