மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சைக்கோ காதலன்... காதலனின் தாய் தந்தை கண்முன்னே காதலிக்கு நேர்ந்த கொடூரம்... 4 பேர் கைது.!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காதலியை வீட்டுக்கு வரவைத்து அவரை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்து இரவு முழுவதும் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காதலன் அவரது தந்தை உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கரிதி மாவட்டத்தை சேர்ந்த இளைஞரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர் தனது காதலியை இரவு வீட்டிற்கு வருமாறு அழைத்திருக்கிறார். இதனை நம்பி அந்த இளம் பெண்ணும் காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த காதலன் அவரது தந்தை, தாய் மற்றும் சித்தி ஆகியோர் சேர்ந்து காதலியை அரை நிர்வாணமாக்கி அவர்கள் வீட்டில் இருந்த மரத்தில் கட்டி வைத்து தாக்கியிருக்கின்றனர். இதில் அந்த இளம் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார்.இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இளம் பெண்ணை மீட்டு சிஜிக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் காதலன் அவரது தந்தை, தாய் மற்றும் சித்தி ஆகிய நான்கு பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.