மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டப் பகலில் வீட்டிற்கு வெளியே நின்ற பெண்ணிடம்... துப்பாக்கி முனையில் நகை பறிப்பு...!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் கோகுல் தனம் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடியிருக்கும் பெண் நேற்று வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். அப்போது, முகமூடி அணிந்து அங்கு வந்த ஒருவர் அவர் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி அவர் அணிந்திருந்த நகையை கழற்றி தரும்படி மிரட்டியுள்ளார்.
அந்த நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டியவுடன் பயத்தில் அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த நகையை கழற்றி கொடுத்துள்ளார். அதை வாங்கிக்கொண்ட முகமூடி கொள்ளையன் அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனையும் மிரட்டி அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச்சென்றான்.
இந்த கொள்ளை சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை வைத்து துப்பாக்கியை காட்டி நகை மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறனர்.