#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருப்பதி லட்டில் மயக்கமருந்து!.. இளம்பெண்ணின் சூழ்ச்சியால் நிற்கதியாக நின்ற பெருமாள் பக்தர்..!
திருப்பதி லட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, ஹைதராபாத்தை சேர்ந்த பக்தரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை சுருட்டி சென்ற இளம்பெண்.
ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் சென்றுள்ளார். பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் அந்த நபருக்கு அறிமுகமாகியுள்ளார். அதன் பிறகு ஸ்ரீகாளகஸ்தியில் இருக்கும் ஒரு லாட்ஜிக்கு அவரை அழைத்துச் சென்ற அந்த பெண் திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதத்தை அவருக்கு கொடுத்துள்ளார்.
பிரசாதம் சாப்பிட்ட சில நிமிடங்களில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. மயக்கத்தில் இருந்த அந்த நபரிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிக் கொண்டு அந்தப் பெண் சென்று விட்டார். மயக்கம் தெளிந்த அந்த நபர் கண் விழித்து பார்ப்பதும் தன்னை ஏமாற்றி அந்த பெண் தன்னிடம் இருந்த நகை மற்றும் பணம் திருடிச் சென்றது தெரிந்தது.
உடனே அவர் ஸ்ரீகாளஹஸ்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஸ்ரீ காளஹஸ்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லாட்ஜில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.