மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கஞ்சாவால் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்... பெற்றோரை தீ வைத்து எரித்த பயங்கர சம்பவம்..!!
கஞ்சா போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தனது பெற்றோரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த திருகாஞ்சி பகுதியில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி (67). இவரது மனைவி லதா. இவர்களின் மகன் புகழ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. ஐந்து வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார் புகழ். இதனால், பெற்றோர் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் வீட்டில் இருந்த பெற்றோரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு, எதுவுமே நடக்காதது போல உறவினர் வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்தி, லதா இருவரும் வீட்டில் தீ காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக, மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் லதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினர் விசாரணையில், புகழ் கஞ்சா போதைக்கு அடிமையாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக மாறியதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்த புகழை காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.