மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களே கவனம்.. ஆதார் இலவசமாக அப்டேட் செய்ய நாளை கடைசி நாள்.. இன்றே புதுப்பிச்சுக்கோங்க.!
இந்தியாவில் தனிமனிதனின் அடையாளமாக இருக்கும் ஆதார் அட்டை அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துவிட்டது.
இதனால் ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள், தனிநபரின் கைரேகை மற்றும் முகம் போன்றவை புதுப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி, ஜூன் 14ம் தேதிக்குள் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. ஆதார் இணையத்திற்கு சென்று பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், அலைபேசி எண், இ-மெயில் போன்றவற்றை இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம்.
இயலாத பட்சத்தில் தங்களின் வீட்டருகே இருக்கும் ஆதார் புதுப்பிப்பு மையத்திற்கு சென்று, ரூ.50 கட்டணம் செலுத்தி அனைத்தையும் புதுப்பிக்கலாம்.