மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களே.. ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பை நீட்டித்த மத்திய அரசு..! கடைசி தேதி இதுதான்..!
தேர்தலின்போது தங்களின் வாக்குகளை பதிவுசெய்ய முக்கியமான ஆவணமாக கருதப்படும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் கார்டு விபரங்களை இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இதற்காக ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி வரை அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2024-ஆம் வருடம் மார்ச் 31-ஆம் தேதிவரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை பெரும்பாலான மக்கள் ஆதார் விபரங்களை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்காமல் இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு அவகாசமளிக்கும் வகையில், இந்த நீட்டிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.