மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான கையோடு, கள்ளக்காதலனுடன் ஜோடி சேர்ந்த புது மணப்பெண்.! பின் அரங்கேறிய சம்பவம்.!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரித் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரோடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால், திருமணம் முடிந்த ஒரு சில தினங்களிலேயே கணவன் வெளிநாட்டிற்கு சென்று விட, அந்த பெண் கான்புரா பகுதியிலிருக்கின்ற ஒரு கிராமத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் தான், அந்த பெண்ணுக்கும் குத்ரியாபாத்தை சேர்ந்த ஒரு இளைஞருக்குமிடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களுக்கிடையிலிருந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. ஆகவே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. அந்த வகையில், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் இரவு தன்னுடைய கள்ளக்காதலியை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த இளைஞர்.
அந்த இளைஞர் அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்வதை அக்கம்பக்கத்தில் இருந்த நபர்கள் பார்த்து விட்டனர். இந்த விவகாரம் ஒட்டுமொத்த கிராமத்தினருக்கும் தெரிந்துவிட, அனைவரும் அந்த பெண்ணின் வீட்டிற்கு முன் ஒன்று கூடி கதவை தட்ட தொடங்கினர். இதன் காரணமாக, அந்த கள்ளக்காதல் ஜோடி அந்த கிராம மக்களிடம் சிக்கிக்கொண்டது. ஆகவே அந்த கிராம மக்களும், அந்த பெண்ணின் குடும்பத்தை சார்ந்தவர்களும் கடுமையான ஆத்திரமடைந்தனர். அந்த இளைஞரை ஊருக்கு நடுவே இருந்த ஒரு மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
இதன் காரணமாக, அந்த இளைஞருக்கு மண்டை உடைந்தது. இவ்வளவு விஷயம் நடந்த பின்னரும் யாரும் இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கவில்லை. ஆனால் இது பற்றி காவல்துறையினர் எப்படியோ தெரிந்து கொண்டு, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்பு அந்த கிராம மக்களிடமிருந்து, அந்த இளைஞரை மீட்டுள்ளனர். மேலும் அந்த பெண்ணையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
ஆனால் இந்த விவகாரம் குறித்து அந்த கிராமத்தில் உள்ள ஒருவர் கூட எழுத்துப்பூர்வமாக புகார் வழங்கவில்லை. இதற்கு நடுவே மீண்டும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து கூடியது. இந்த கள்ளக்காதல் ஜோடி கையும், களவுமாக சிக்கியிருப்பதால், இவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று பஞ்சாயத்தார் முடிவு செய்ய, அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும், அந்த இளைஞரின் குடும்பத்தினரும் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இரு தரப்புமே மறுப்பு தெரிவித்ததால், இது குறித்து அடுத்த கட்டமாக என்ன செய்வது என பஞ்சாயத்தார் குழம்பிப்போயினர். இதற்கு நடுவே வெளிநாட்டிலிருக்கின்ற அந்த பெண்ணின் கணவனுக்கும் இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. ஆகவே அடுத்தபடியாக இந்த விவகாரத்தில் என்ன நடக்கவுள்ளது என்பது இனிதான் தெரியும்.