மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் கட்டாய சோதனை இனி கிடையாது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
உலகளவில் கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்திய கொரோனா வைரஸின் காரணமாக தடுப்பூசி சான்றிதழ் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் போன்றவை கட்டாயமாக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு செல்லும் பட்சத்தில் மேற்கூறிய சான்றிதழ்கள் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அபுதாபிக்கு விமானத்தில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கிடையாது என அறிவித்துள்ளது. மேலும், அவர்கள் கொரோனா சான்றிதழை சமர்பிப்பதில் விலக்கு அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபிக்கு வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் அல்லது தடுப்பூசி செலுத்தாமல் இருந்தாலும், விமான நிலையத்திற்கு வந்ததும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்ய தேவையில்லை. தங்களின் நகரங்களில் இருந்து புறப்படும் போது, 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை சான்றிதழ் போதுமானது என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் அபுதாபி செல்லும் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக்கு உள்ளாக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சுய தனிமையில் வைக்கப்படும் நிகழ்வுகளும் விடைபெற்றுள்ளது. இது அபுதாபி செல்லும் பலருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் செய்தி ஆகும் என்றும் அந்நாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.